Breaking News

பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்த ரஷ்யா- நிராகரித்த உக்ரைன்

அட்மின் மீடியா
0

உக்ரைனில் ரஷிய படைகள் இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அமைச்சரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. இதனால் உக்ரைனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா நேற்று உத்தரவிட்டது.



அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் அழைப்பு விடுத்தது.ஆனால், ரஷியாவின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மீண்டும் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback