ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் வேலையை ராஜினாமா செய்த பேராசிரியர்!!
அட்மின் மீடியா
0
ஹிஜாப் அணிந்து பாடம் நடத்தக்கூடாது என்று கூறியதால் கர்நாடகாவில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் சாந்தினி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆங்கில பாட விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திவந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரவேண்டாம் என கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி தனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்துள்ளார்
Tags: இந்திய செய்திகள்