Breaking News

கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகள்.. அனுமதிக்க மறுத்த பள்ளி நிர்வாகம்

அட்மின் மீடியா
0

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவி உடை அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரத்தொடங்கினர். 



ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. 

நீதிமன்ற உத்தரவின்பேரில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.ஹிஜாப் அணிய தடைமாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

பல பள்ளிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்திருந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 

மாணவிகள் ஹிஜாபை கழற்ற மறுத்துவிட்டதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


https://twitter.com/NikhilaHenry/status/1493127123376414721


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback