அபுதாபியை தொடர்ந்து பஹ்ரைனிலும் பாரம்பரிய இந்து கோவில் கட்டப்படும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் முதல் பாரம்பரிய இந்து கோவிலான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் கட்டப்பட்டு வருகின்றது இந்நிலையில் பஹ்ரைனில் மற்றொரு இந்து கோவிலை கட்டும் பணி துவங்கியுள்ளது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இது பற்றிய அறிவிப்பில், “பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான மாண்புமிகு இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன், அன்பான உரையாடலை நடத்தினேன். சுவாமிநாராயண் கோவிலுக்கு நிலம் ஒதுக்கீடு தொடர்பான சமீபத்திய முடிவு உட்பட, இந்திய சமூகத்தின் தேவைகளை நாடு கவனத்தில் கொள்வதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்