Breaking News

பாம்பு பிடிக்கும் வா வா சுரேஷை பாம்பு கொத்தியது வைரல் வீடியோ.... மருத்துவமனையில் அனுமதி....

அட்மின் மீடியா
0

 கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ் கோட்டயம் குறிச்சி என்ற பகுதியில் நல்லபாம்பை பிடித்து அதை பையினுள் அடைக்க முயலும் போது சுரேஷின் தொடையில் பாம்பு கடித்தது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

         

கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின் வலது காலில் கடித்தது. உடனடியாக வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார். அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


https://twitter.com/cricadharsh/status/1488210515822366720

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback