Breaking News

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! எந்த மாவட்டத்திற்க்கு தெரியுமா.....

அட்மின் மீடியா
0

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை ஒட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது



ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 190ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு பொதுத்தேர்வு இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் , வங்கிகள் ஆகியவற்றிற்கும் இந்த விடுமுறை பொருந்தாது. 

அனைத்து அரசு கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அவசர பணிகளை கவனிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 12-ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback