ஜூலை 1முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை
அட்மின் மீடியா
0
ஜூலை 1ஆம் தேதி முதல் .ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உற்பத்தி முதல் உபயோகம் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள ப்ளாஸ்டிக் பொருள்கக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவானது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் உத்தரவுக்கு முன்னதாக அதாவது ஜூன் 30ஆம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனை கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்