BREAKING உள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்துப் போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக அதிமுக, பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்ததை அடுத்து தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.மேலும் அதிமுகவுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பாஜக கேட்ட இடங்களை ஒதுக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்துப் போட்டி. அதிமுகவுடன் நல்லுறவு வருங்காலங்களிலும் தொடரும். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தனித்துப் போட்டியிட மாநில பாஜக முடிவு செய்துள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்