தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் என்ன-- முழு விவரம்.....
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் இரவு ஊரடங்கு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கட்டுப்பாடுகள் என்ன என்ன.....
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்
பால், மருத்துவம், பத்திரிக்கை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இரவில் அனுமதி
இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை
பேருந்து, புறநகர் இரயில்களில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை
மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.
பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது
பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு
வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை
பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும்
உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்
அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும்.
அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி
திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்
ஞாயிறு ஊரடங்கின் போது
ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்
ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது.
ஞாயிற்றுக்கிழமைஅன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் முழு விவரங்களுக்கு:-
https://drive.google.com/file/d/1DpLOTzOFMPOeXeB7TeZrl4lZqWffaowX/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்