இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பு!! என்னென்ன பொருட்கள் இருக்கும்... முழு விபரம்!!
தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் இலவச வேஷ்டி சேலைகளை ரேஷன் அட்டைகள் மூலம் வழங்கி வருகிறது. சென்ற ஆண்டு உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பையும் வழங்கியது.
நடப்பாண்டிலும் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை ஜனவரி 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள்:-
1 கிலோ பச்சரிசி,
1 கிலோ வெல்லம்,
முந்திரி 50 கிராம்,
திராட்சை 50 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்,
பாசிப்பருப்பு 500 கிராம்,
நெய் 100 கிராம்,
மஞ்சள் தூள் 100 கிராம்,
மிளகாய் தூள் 100 கிராம்,
மல்லித்தூள் 100 கிராம்,
கடுகு 100 கிராம்,
சீரகம் 100 கிராம்,
மிளகு 50 கிராம்,
புளி 200 கிராம்,
கடலை பருப்பு 250 கிராம்,
உளுந்தம் பருப்பு 500 கிராம்,
ரவை 1 கிலோ,
கோதுமை மாவு 1 கிலோ,
உப்பு 500 கிராம்,
முழு கரும்பு ஒன்று ஆகியவை உடன் துணிப்பையும் சேர்த்து வழங்கப்பட இருக்கிறது
Tags: தமிழக செய்திகள்