Breaking News

மீண்டும் தொடங்கிய தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பெண்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் திருமணத்திற்கு உதவிபுரியும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளது. இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. 



இத்திட்டத்தின் மூலமாக 10ம் வகுப்பு படித்த மணப்பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது.

12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது.

இத்திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிதியின்மை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான பெண்கள் தாலிக்கு தங்கம் கோரி அரசிடம் மனு அளித்துள்ளனர். இதையடுத்து பெண்களுக்காக நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback