Breaking News

புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை

அட்மின் மீடியா
0

புதுவையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் தடையில்லை என்றும் ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 


புதுச்சேரியில், கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback