அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து தற்போது கே.பி.அன்பழகன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை தருமபுரி, சென்னை உட்பட பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்துக்களை சேர்த்ததாக கே.பி. அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்