மத்திய மாநில அரசு சின்னங்களை பயன்படுத்த கட்டுப்பாடு : மீறினால் குற்றவியல் நடவடிக்கைடிஜிபி எச்சரிக்கை!!
மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 05.01.2022 அன்று வழங்கிய நீதிப் பேராணையின்படி (W. P. No. 14697/2014) மத்திய, மாநில அரசு சின்னங்களை (State Emblems) முன்னாள் நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பலர் அரசு சின்னங்களைத் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள், கொடிகள், பெயர்ப் பலகைகள் மற்றும் கடிதங்களில் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றத்திற்குத் தெரியவந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் அரசு சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும் மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் தங்களின் வாகனம், விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேட்களில் அரசு சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சட்டங்கள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பொது மக்கள் புகாரளிக்கலாம் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்