சிம் ஸ்வாப் முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி 4 பேர் கைது!
தமிழகத்தில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.25 லட்சம் பணம் சிம் ஸ்வாப் முறையில் கூகுள் பே மூலம் மோசடி செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிம் ஸ்வாப் என்றால் என்ன?
நீங்கள் பயன்படுத்தி வரும் சிம்கார்ட் அந்த தொலைபேசி எண்ணில் தான் உங்களது வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணில் தான் உங்கள் கூகுள் பே, போன்பே, பே டி எம், போன்ற யூபிஜ கணக்கும்இருக்கும் வங்கி ஒடிபியும்உ ங்கள் மொபைலுக்கு தான் வரும்
அதே எண்ணில் புதிய சிம்கார்டை வேறொருவர் வாங்குகிறார். அந்த புதிய சிம்கார்டை இயக்கி, கூகுள் பே, பேடி எம் போன்ற செயலிகள் மூலம் உங்கள் பணம் கொள்ளையடிக்கும் முறைக்கு சிம் ஸ்வாப் (SIM SWAP) என்று பெயர்.
இந்த நூதன முறையைப் பயன்படுத்தி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டது.அதாவது மருத்துவமனையின் சிம் தொலைந்து விட்டதாக கூறி, சிம் கார்டை கேன்சல் செய்து, புதிய சிம்களை பெற்று அதன்மூலம், மருத்துவமனை வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றி கொள்ளையடித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
போலீசார் நடத்திய விசாரணையில் புகார் செய்த அந்த தனியார் கண் மருத்துவமனையின் கணக்கிலிருந்து மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மேற்கு வங்கம்
சென்ற சென்னை சைபர் க்ரைம் போலீசார் மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் அந்த
ஏடிஎம்-ஐ கண்டுபிடித்து. அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ரோஹன், ராகேஷ்குமார் சிங், சயந்தன்
முகர்ஜி, ராகுல ராய் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்