Breaking News

தமிழக அரசின் இ சேவை மையம் நடத்த 36 தனியார் பிரவுசிங் செண்டர்களுக்கு அனுமதி

அட்மின் மீடியா
0

இ சேவை மையங்கள்தமிழகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் குறைந்த விலையில் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். 



இ-சேவை மையங்களில்  இருப்பிடம், வருமானம், ஜாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற விண்ணப்பித்து கொள்ளலாம். அத்துடன் இ-சேவை மையங்களை பல்வேறு இடங்களில் ஏற்படுத்துவதன் மூலமாக பொதுமக்கள் எளிதான முறையிலும் குறைந்த விலையிலும் சேவைகளை பெற முடியும். புதியதாக இ-சேவை மையங்களை அமைக்கப்படுவதால் புதிய வேலைவாய்ப்புகளை வேலையில்லா இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தர முடிகிறது. என்பதை கருத்தில் கொண்டு 

புதிதாக தனியார் பிரவுசிங் சென்டர்கள் வழியே, இ - சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன.அந்த வகையில் 36 பேர் இ - சேவை மையங்கள் துவக்குவதற்கான ஆணைகளை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback