புதுச்சேரியில் ஜனவரி 31 வரை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன என்ன
கொரானா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
உணவகங்கள், பார்கள், மதுபானக்கூடங்களில் 50% பேருக்கு அனுமதி.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு
மால்கள், வணிக நிறுவனங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.
சலூன், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பாக்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதி
தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களிலும் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி...
கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளிகளை நடத்த அனுமதி.
கோயில் குடமுழுக்களை பக்தர்கள் இன்றி நடத்தி கொள்ளவும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்