Breaking News

2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் தகவல்

அட்மின் மீடியா
0

 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்- அமைச்சர் தகவல்

 


இன்று சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன.

2,000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அதில் பணியாற்றியவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்துவிட்டால் வெளியில் வரலாம்.இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback