இன்று இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு….அனுமதிக்கப்பட்டவை எவை
தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஜனவரி 31 வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்; தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவையெல்லாம் செயல்படும்:
இரவு நேர ஊரடங்கில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதி.
உற்பத்தி தொழிற்சாலைகள்,தகவல் செயல்பட தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும்.
வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி,சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும்.
செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.டாஸ்மாக் கடைகள் செயல்படாது
அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம்.
இரவு நேர ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள்,உணவகங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள், போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்