Breaking News

சனி இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு…எதற்கெல்லாம் அனுமதி! எதற்கெல்லாம் தடை... முழு விவரம்....

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.


இரவு நேர ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள்,உணவகங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.

எனினும்,இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள்,மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் அனுமதி.

மாநிலங்களுக்கிடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள்(பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் வெப்ப நிலையை செய்தல்,கூட்ட அணிதல்,நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
ஊரடங்கு நேரத்தில் உற்பத்தி தொழிற்சாலைகள்,தகவல் செயல்பட தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். 

இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மெட்ரோ,புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

அரசு,தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல்,கலை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும்.

14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது,

பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள்,மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள்,எரிபொருள் வாகனங்கள் போன்றவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்றும், இதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Give Us Your Feedback