FACT CHECK பிபின் ராவத் மரணத்தை கோவை மாணவர்கள் கொண்டாடியதாக பரவும் வீடியோ பொய்யானது யாரும் நம்பவேண்டாம்....
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இழப்பை சந்தோஷமாக கொண்டாடும் கோவை பீளமேடு இஸ்லாமிய இளைஞர்கள். இந்தியா முழுவதும் வைரலாகும் வீடியோ. தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று ஒரு மலையாள வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
இந்த வீடியோ வாட்ஸப் டிவிட்ட்ர், பேஸ்புக் என பல சமூகவலைதளங்களிலும் பரவி வருகின்றது.
மேலும் அந்த வீடியோவில் உள்ள தகவல் தவறானது தவறான தகவலைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி நிர்வாகம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் இறந்த தினத்தன்று, கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது
எப்போதோ நடைபெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்ட வீடியோவை தவறாக சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு இட்டுக்கட்டி ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது
இது குறித்து கல்லூரி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
எங்கள் நேரு கல்வி நிறுவனங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும், தனியார் ஊடகங்களிலும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் இந்திய முப்படை தளபதி மரண நிகழ்வில் எங்கள் மாணவர்களை தவறாக சித்தரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கின்றது.
கல்லூரியில் முதலாம் ஆண்டு புதிய மாணவர்களுக்காக கல்லூரி விடுதியில் மாணவர்களால் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது இந்த துக்க நிகழ்வுக்கு முன்பே நடத்தப்பட்டு விட்டது.
இதை தவறாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் எங்களது மாணவர்களின் நாட்டுப்பற்றையும், இந்திய முப்படை தளபதியின் மரணத்தையும் சம்மந்தப்படுத்தி விஷமிகள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.எங்கள் கல்லூரியின் நிறுவனர் ஓய்வுப்பெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார்.
மேலும் எங்கள் கல்லூரியின் பேராசிரியரகள், அதிகாரிகள் 50 விழுக்காட்டிற்கு மேல் இந்திய ராணுவம் , விமானப்படை அல்லது கப்பற்படையில் பணிபுரிந்தவர்களாவர்.இந்த தவறான செய்தி எங்களையும், எங்கள் மாணவர்களையும், மற்ற கல்லூரி மாணவர்களையும் மனதளவில் காயப்படுத்தியுள்ளது.
இந்த தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.என தெரிவித்துள்ளார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=sOHfUg9xFN0&t=121s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி