FACT CHECK ஜெர்மனியில் வானில் இருந்து கேட்கபட்ட பாங்கு சத்தம் ???என பரவும் வீடியோ உண்மையா????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மாஷா அல்லாஹ் ஜெர்மனியில் வானில் இருந்து கேட்கபட்ட பாங்கு சத்தம் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பாங்கு சத்தம் வானில் இருந்து கேட்கவில்லை, மாறாக இமாம் தான் பள்ளிவாசலில் பாங்கு சொல்லி இருக்கின்றார்.
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 05.04.2020 அன்று ஜெர்மனியில் உள்ள பெர்லின் என்ற பகுதியில் உள்ள Dar Assalam Mosque ஆகும் . அங்கு கொரானா காலத்தில் பள்ளிவாசலில் சமூக இடைவெளி இல்லாமல் திடிரென கூடிய மக்கள் என்று RUPTLY என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் கீழ் உள்ள முழு வீடியோவில் 0.25 வது செகன்டில் இமாம் பாங்கு சொல்லும் பகுதி வருகின்றது. எனவே வானில் இருந்து பாங்கு சத்தம் வரவில்லை என்று உறுதியாகின்றது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=l1QrwC52Kpo&t=2s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி