FACT CHECK: இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது என்ற யூஜிசி தகவல் உண்மையா......
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும்,ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக மட்டுமே நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக வெளியான செய்தி என்று ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
டிசம்பர் 10ஆம் தேதி என குறிப்பிட்டு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட காரணத்தால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும். ஆன்லைனில் இனி நடைபெறாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் பொய்யானது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த கடிதத்தின் உண்மை தன்மை குறித்து யுஜிசி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அது போலியான கடிதம். அதுபோன்ற கடிதத்தை யுஜிசி அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
A public notice regarding offline examinations in universities is circulating on social media & claims to be issued by @ugc_india#PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) December 12, 2021
➡️This public notice is #FAKE!
➡️University Grants Commission has NOT issued any such notice.
For info 🔗https://t.co/7iXW8wa5Ep pic.twitter.com/DxY6QbQtmg
Tags: FACT CHECK மறுப்பு செய்தி