BREAKING இந்தியாவில் 12 வயதிலிருந்து 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்
அட்மின் மீடியா
0
இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை 12 வயதிலிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசி மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்