திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ..!!
அட்மின் மீடியா
0
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. இங்கு, இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி இன்று 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.டிசம்பர் 15ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்