தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !! முழு விவரம்....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது.
மேலும்,மருத்துவம் பயில விருப்பம் உள்ள மாணவர்கள்
https://tnmedicalselection.net/Notification.aspx
அல்லது
https://www.tnhealth.tn.gov.in/
என்ற இணையதளங்களில் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்