முடிவுக்கு வந்தது விவசாயிகள் போராட்டம் ஓராண்டுக்கு பின் வீடு திரும்பும் விவசாயிகள்
இந்தியாவில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்தனர்
இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என மோடி அறிவித்தார். அதன்படி நவம்பர் 29ம் தேதி பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் விவசாயிகள் போராட்டததை கைவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் நேற்று விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டில்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
சக்யுக்த கிஷான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று (டிச.,09) போராட்டத்தை கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி சனிக்கிழமை டிசம்பர் 11 ம் தேதி டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் இருந்து விவசாயிகள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். நாளை சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளிலும் காலை 9 மணிக்கு வெற்றி பேரணி நடத்தப்படும்.
அதனை தொடர்ந்து டிசம்பர் 13ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்