ஒரே நாடு ஒரே ரேஷன் மத்திய அரசின் மேரா ரேசன் ஆப் சிறப்பம்சம்.....
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இணைத்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள எந்தவொரு குடிமகனும் நாட்டில் எந்த மாநிலத்திலும் தனக்குரிய ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல் வேலையின் காரணமாக அடிக்கடி நகரம் அல்லது மாநிலத்தை
மாற்றுபவர்களுக்கு இந்த மேரா
ரேஷன் ஆப் பலனுள்ளதாக இருக்கும்
சிறப்பம்சம்:-
இந்த ஆப் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது.
இந்த ஆப் மூலம் உங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி எவ்வளவு வழங்கப்படுகிறது, அதன் விலை என்ன, நீங்கள் வாங்கியது எவ்வளவு இன்னும் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கபட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
அந்த ஆப்பில் உங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டால் அதில் உங்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் இங்கே காண்பிக்கப்படும்.
இந்த ஆப் அனைத்தும் Google Maps உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.nic.onenationonecard&hl=en_IN&gl=US
Tags: தமிழக செய்திகள்