Breaking News

இன்றும் நாளையும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

அட்மின் மீடியா
0

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே இன்று மற்றும் நாளை  இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே வங்கிகள் செயல்படாது ஆகவே உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை இன்றே சரியாக திட்டமிட்டு கொள்ளுங்கள். 



வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் படிப்படியாக தேசிய வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி டிசம்பர் 16, 17 தேதிகளில் இந்த வேலை நிறுத்தம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது. வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கக்கூடும். 


டிசம்பர் 16, வியாழக்கிழமை 

டிசம்பர் 17 வெள்ளி கிழமை 

இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது. வங்கி சேவைகள் முழுமையாக பாதிக்கக்கூடும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback