தர்மபுரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் உடனே தயாராகுங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது.
கல்வி தகுதி:
18 வயது நிரம்பிய படிக்காத மற்றும் 8ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள்,என அனைவரும் கலந்து கொள்ளலாம்
வேலைதேடும் அனைத்து இளைஞர்களும் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் (Bio-Data)வர வேண்டியது அவசியமானதாகும்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 03.00 மணி வரை தருமபுரியில் உள்ள அரூர் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
Tags: வேலைவாய்ப்பு