திடீர் பெண் சாமியார் அவதாரம் அன்னபூரணி....
அன்னப்பூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியார் ஒருவரின் காணொளிகள் சமீபத்தில் அனைவரின் கவனம் ஈர்த்தன.
அதனை அன்னப்பூரணி அம்மாவின் பிண்ணனி வரலாற்
றை ஆராயத் தொடங்கிய நெட்டிசன்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பிரபல பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் ஜோடியாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி.
எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் அமர்ந்துள்ளார்கள். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அது இரு குடும்பத்திற்கு தெரிந்து பஞ்சாயத்தாகி இருக்கிறது.
அன்னப்பூரணி - அரசு ஜோடி தங்களுக்கு விவாகரத்து தந்துவிடும் படி அந்நிகழ்ச்சியில் கேட்கின்றது.
அவர் தான் தற்போது ஆதிபராசக்தி அவதாரம் என ஊரை ஏமாற்றிக் கொண்டுள்ளார். மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோவும், தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற அக்கவுண்ட்டில் வெளியான வீடியோவையும் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/KarthikSubbur11/status/1474982685852372995
Tags: தமிழக செய்திகள்