Breaking News

பர்த் டே பார்ட்டியில் உயிரிழந்த நபர்... வாட்ஸ்அப்பில் வீடியோ - உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

சமூகவலைதளமான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வீடியோ ஒன்று வெளியானது. அதில் பிறந்தநாள் கொண்டாடும் நபரை அவரின் சக நண்பர்கள் அடித்து உதைத்து கேக் வெட்டிய நபர் திடீரென்று மயக்கமடைவார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவானது போல இருக்கும். வீடியோவின் இறுதியில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது



இந்த வீடியோவை பிறந்தநாள் கொண்டாடிய அந்த நபர் இறந்துவிட்டதாக தலைப்பு  போட்டு வீடியோவை பரப்பிவந்தனர். 

ஆனால் அந்த வீடியோ உண்மையாக நடந்தது இல்லை  மக்கள் விழிப்புணர்வுக்காக எடுக்க பட்ட ஒரு வீடியோ தான் அது .ஹம்சா நந்தினி எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ 2020 மார்ச் 2-ம் தேதி பதிவாகி இருக்கிறது. ஆனால் பலரும் அது உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றார்கள்

அசல் வீடியோவை பார்க்க:-

https://www.facebook.com/ihamsanandini/videos/300264791984090/

Tags: FACT CHECK

Give Us Your Feedback