ஆயிரத்தை நெருங்கும் ஒமைக்ரான் பாதிப்பு.. மாநிலவாரியாக பட்டியல்....
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 961 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’, அடுத்த சில நாட்களில் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவிவிட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 961ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 22 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக டெல்லியில் 263 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 252 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்
நேற்று காலை 781 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு
இருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 961
பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை
அறிவித்துள்ளது
ஓமிக்ரான் பாதித்த மாநிலங்கள் விவரம்:
டெல்லி 263
மகாராஷ்டிரா 252
கேரளா 65
தெலங்கானா 62
குஜராத் 97
ராஜஸ்தான் 69
தமிழகம் 45
கர்நாடகா 34
ஆந்திர பிரதேசம் 16
மத்தியப் பிரதேசம் 9,
மேற்கு வங்கம் 11
ஹரியானா 12
ஒடிஷா 9
ஜம்மு காஷ்மீர் 3
உத்தரப்பிரதேசம் 2
சண்டிகர் 3
லடாக் 1
உத்தரகாண்ட் 4
ஹிமாச்சல் பிரதேசம் 1
மணிப்பூர் -1,
கோவா -1
பஞ்சாப் -1
ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 320 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்