Breaking News

சென்னையில் 'திடீர்' மழைக்கான காரணம் என்ன? வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் விளக்கம்

அட்மின் மீடியா
0

சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து கன மழை கொட்டியதால், பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:-


வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால், இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மொத்தத்தில் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback