சீனாவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் கரு முட்டை கண்டுபிடிப்பு!!!
அட்மின் மீடியா
0
தெற்கு சீனாவில் புதைபடிவ முட்டைக்குள் சுருண்டு கிடக்கும் மிகவும் அரிதான, பாதுகாக்கப்பட்ட டைனோசர் கருவை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும் இந்த கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயரிடப்பட்டுள்ளது
இந்த டைனோசர் முட்டை பேபி யிங்லியாங் தலை முதல் வால் வரை 10.6 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது.
அந்த உயிரினம் 6.7 இன்ச் நீள முட்டையில், சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன்
இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஸ்டீவ் ப்ருசட் என்பவர் தன் டிவிட்டர் பக்கத்தில்
தான் கண்டுபிடித்த அற்புதமான டைனோசர் புதைபடிமங்களில் இதுவும் ஒன்று என்றும் அந்த டைனோசர் முட்டைக்கரு, பொறிந்து வெளியே வரும் நிலையில் இருந்தது என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு:-
https://twitter.com/SteveBrusatte/status/1473326140525883394
Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்