Breaking News

ஜவுளி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை ஒத்திவைத்தது GST கவுன்சில்

அட்மின் மீடியா
0

ஜனவரி 1 ம் தேதி முதல் ஜவுளித் துறைக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்ட முடிவை தற்காலிகமாக நிறுத்தியது மத்திய அரசு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்,ஜிஎஸ்டி கவுன்சிலின் 46-வது கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது

கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்தி ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது

இந்நிலையில்,ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது.பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில்,ஜவுளிப் பொருட்களின் மீதான 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமான ஜிஎஸ்டி வரி உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Share this