நெல்லை பள்ளி கட்டிட விபத்து தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது..!
அட்மின் மீடியா
0
- நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உள்பட மூவர் கைது!
திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மேலும் நெல்லை சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதி வரை அப்பள்ளிக்கு விடுமுறை என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்