Breaking News

ஒமிக்ரான் அச்சுறுத்தல் டிசம்பர் 31 வரை இரவு நேர ஊரடங்கு குஜராத் அரசு அறிவிப்பு!I

அட்மின் மீடியா
0

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.



அதன்படி,அகமதாபாத்,காந்திநகர், சூரத்,ராஜ்கோட்,வதோதரா,பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜுனகர் ஆகிய 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அவசர தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback