திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய 24 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து
திருவெற்றியூரில் நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னையின் திருவொற்றியூரில் அரிவாகுளத்து பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால்,D பிளாக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகின.
இதனைத் தொடர்ந்து,தீயணைப்பு மீட்பு பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,கட்டட இடிபாடுகளுக்கு இடையில் யாரேனும் சிக்குயுள்ளனரா? என்று தேடி வருகின்றனர்.மேலும்,காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால்,இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்