Breaking News

உ.பி தொழிலதிபர் வீட்டில் அள்ள அள்ள பணம்! ரூ.150 கோடிக்கு அதிகமாக பறிமுதல். வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான பியூஷ் ஜெயின் என்பவர், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகளை முறையாக செலுத்தவில்லை என்றும், இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.இதன் காரணமாக, அந்த வருமானவரித்துறை அதிகாரிகள், பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான அனந்தபுரி வீடு மற்றும் அங்குள்ள அலுவலகங்களில்  திடீரென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

 



இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் அப்படியே கடும் அதிர்ச்சியில் உரைந்து போனார்கள்.

காரணம் வீட்டில் எங்கு பார்த்தாலும் பணக்கட்டுகள், ஒவ்வொரு நோட்டு கட்டையும், டேப் ஓட்டி மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பணங்கள் யாவும் அட்டை பெட்டியில் வைக்கப் பட்டிருந்தன.மேலும் கைப்பற்றப்பட்ட மொத்த பணம் சுமார் 150 கோடி ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த பணத்தை எல்லாம் கைப்பற்றிய அதிகாரிகள், தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் ரொக்கமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/ChaudharyParvez/status/1474303887137906692

 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback