15 வயது முதல் 18 வயதினருக்கு கொரானா தடுப்பூசி போட ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு
15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான கோவாக்ஸின் தடுப்பு மருந்து செலுத்தும் முன்பதிவு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும்,முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில்,நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணைய தளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஐடி கார்டை பயன்படுத்தி தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள் கொரானா செய்திகள்