Breaking News

இன்று 13 மாவட்டங்களில் கன மழை சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

 தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் வடக்கு, வடகிழக்கு திசையில் ஒடிசா மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரமாக நகர்ந்து இன்று கரைகடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த நிலையில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக


 
04.12.2021 ம் தேதி:-
 
திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

05.12.2021 ம் தேதி:-
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

06.12.2021 ம் தேதி:-
 
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback