ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு - எதற்க்கு அனுமதி? எதற்க்கு தடை ? முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஜனவரி 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு - எதற்க்கு அனுமதி? எதற்க்கு தடை ? முழு விவரம்
மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை
சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை.
அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு
பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.
திரையரங்குகளில்50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்;
வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்.
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி
அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி
மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி
திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்
தமிழக அரசின் அறிவிப்பினை முழுமையாக படிக்க
Tags: தமிழக செய்திகள்