Breaking News

FACT CHECK திரிபுராவில் நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ என ஷேர் செய்யப்படும் வீடியோவின் உண்மை என்ன???

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  திரிபுராவில் நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ திரிபுராவில் நடந்தது இல்லை, தற்போது திரிபுராவில் நடந்து வரும் மோதலுக்கும் இந்த தீ விபத்திற்க்கும் சம்மந்தம் இல்லை


இந்த தீ விபத்து வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் என்ற பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்து ஆகும்


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது என்றும் திர்புராவில் நடந்தது என  பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=6X2Ym-OHlMI


https://www.youtube.com/watch?v=Wi9sWZ5Cz1c

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback