FACT CHECK இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டதா? உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இந்தோனேஷியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு.எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர், 7500 ஆண்டுகளுக்கு முன்னர்,அதாவது அமெரிக்க கண்டம் கண்டுபிடிப்பதற்க்கு முன்பு,அதாவது கிறுத்துவம், இசுலாம் தோன்றுவதற்க்கு முன்பு என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்பட சிவன் கோவில் இந்தோனேசியாவில் கிடையாது ,அந்த சிவன் கோவில் வியட்நாமில் எடுக்கபட்டது
மேலும் அந்த கோவில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிருவிஅருளிய சிவாலயம் கிடையாது
வியட்நாம் நாட்டில் உள்ள Cát Tiên archaeological site எனற இடம். அங்கே கடந்த 4ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்து குடியேறிய மக்களால் நிறைய சிவ லிங்கம் கொண்ட கோயில்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் உள்ள கோயிலும். கடந்த 1985ம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி வியட்நாம் அர்சின் சுற்றுலாதுறை இணையதளத்தில் மிகவும் விளக்கமாக பதிவிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி