அஞ்சலக சேமிப்பு கிராம சுமங்கல் யோஜனா திட்டம் முழு விவரம்....
கிராம சுமங்கல் யோஜனா திட்டம்
அஞ்சல் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தின் மூலம் தினமும் ரூ.95 செலுத்தினால் திட்டம் முடியும் போது ரூ.14 லட்சம் வரை பெறலாம். இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன.
திட்டம் 1
15 ஆண்டு கால திட்டம்
வயது வரம்பு:-
குறைந்தபட்ச வயது 19 முதல் 45 வயது வரை
இந்த 15 ஆண்டு கால சேமிப்பில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20% பணம் திரும்ப கிடைக்கும்.
மீதமுள்ள பணம் திட்டம் முடிவடைந்த பின் போனஸ் உடன் மொத்தமாக வழங்கப்படும்.
ஒருவேளை இந்த திட்டத்தை தொடர்ந்த நபர் இறந்து விட்டால் அந்த தொகை முற்றிலும் அவரது நாமினிக்கு கொடுக்கப்படும்.
திட்டம் 2
காலம் : 20 ஆண்டு கால திட்டமாகும்.
வயது வரம்பு :- அதிகபட்ச வயது 40 வயது வரை
இந்த 20 ஆண்டு கால சேமிப்பில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20% பணம் திரும்ப கிடைக்கும்.
மீதமுள்ள பணம் திட்டம் முடிவடைந்த பின் போனஸ் உடன் மொத்தமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.95 செலுத்தினால் போதுமானது. இதில் காலாண்டு பிரீமியம் ரூ.8,449ம், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ம், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ம் ஆகும்.
Tags: முக்கிய செய்தி