முழுமையாக கரையை கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தனது டிவிட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது
இருப்பினும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்