இன்றும் ,நாளையும், ரெட் அலர்ட் எச்சரிக்கை மாவட்டங்கள்...இவைதான்
தமிழகத்திற்கு இன்றும் ,நாளையும், ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடகடலோர பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று 10 ம் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் நாளை 11 ம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்'டும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
https://mausam.imd.gov.in/imd_latest/contents/districtwise-warning.php?day=Day_3
Tags: தமிழக செய்திகள்