Breaking News

காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது



அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறாது என்று நேற்றுவரை கணக்கிடப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது. 

தற்போது புதிதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பட்சத்தில் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்கு தெற்கே உள்ள கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback