Breaking News

ஏர்டெல்,வோடபோனை தொடர்ந்து ஜியோ ரிசார்ஜ் கட்டணமும் உயர்வு

அட்மின் மீடியா
0
ஏர்டெல் ,வோடபோணை தொடர்ந்து ஜியோ-வும் தனது திட்டங்களின் கட்டணத்தொகை 20% அளவு உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றது

பிரபல தொலைதொடர்பு நிறுவனமான, ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு கடந்த 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

இதனை தொடர்ந்து அடுத்த அதிரடியாக வோடோபோன் - ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன. 

இந்நிலையில் இன்று ஜியோ நிறுவனமும் 20 சதவீத கட்டணத்தை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ரூ. 75 பேசிக் ப்ளான் : அன்லிமிடெட் கால், 28 நாட்கள் வேலிடிட்டி ப்ளான்               ரூ. 99 ஆக உயர்கிறது.

ரூ. 129 ப்ளான் : அன்லிமிடெட் கால், 2 ஜிபி டேடா ப்ளான்                                                 ரூ. 155 ஆக உயர்கிறது.

ரூ. 149 ப்ளான் : 24 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா ரூ. 179 ஆக உயர்கிறது.

ரூ. 199 ப்ளான்- 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் கால் ரூ. 239 ஆக உயர்கிறது.

ரூ. 249 ப்ளான் : 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா ரூ. 299 ஆக உயர்கிறது.

ரூ. 399 ப்ளான் : 56 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா  ரூ. 479 ஆக உயர்கிறது.

ரூ. 329 ப்ளான் : 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், 6 ஜிபி டேட்டா          ரூ. 395 ஆக உயர்கிறது.

ரூ. 555 ப்ளான் : அன்லிமிடெட் கால், 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு1.5 ஜி.பி டேட்டா ரூ. 666 ஆக உயர்கிறது.

ரூ. 599 ப்ளான் : அன்லிமிடெட் கால், 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி டேட்டா ரூ. 719 ஆக உயர்கிறது.

ரூ. 1299 ப்ளான் : 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், 24 ஜிபி டேட்டா ரூ. 1559 ஆக உயர்கிறது.

ரூ. 2399 ப்ளான் : 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா ரூ. 2879 ஆக உயர்கிறது. என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback